இந்தியா, ஜூலை 15 -- விஜய் நடித்த லியோ படத்தில் தன்னை லோகேஷ் கனகராஜ் சரிவர பயன்படுத்தாமல் வீணடித்து விட்டதாகவும், அதனால் லோகேஷ் மீது தனக்கு கோபம் இருப்பதாகவும், அந்தப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சய் தத் கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது பேச்சுக்கு லோகேஷ் கனகராஜ் பதில் கொடுத்திருக்கிறார்.

டி.எச்.ஆர் இந்தியாவுக்கு லோகேஷ் அளித்த பேட்டியில், 'அன்று சஞ்சய் தத் பேசிய உடனயே எனக்கு போன் செய்தார். அப்போது அவர் தான் வேடிக்கையாக பேசியதை மக்கள் திரித்து, வெட்டி ஒட்டி சமூகவலைதளங்களில் பதிவிட்டு விட்டனர். அதை பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது என்றார். அதற்கு நான் அதெல்லாம் ஒன்று பிரச்சினை இல்லை என்று கூறினேன்.

மேலும் பேசிய லோகேஷ், ' நான் அவர் கதாபாத்திரத்தில் தவறு செய்திருக்கலாம். தவறே செய்யாமல் இருக்க நான் தலைசிறந்த இயக்குநரோ அல்லது...