இந்தியா, மார்ச் 8 -- நடிகை மஞ்சிமா மோகன் எஸ்.எஸ். மியூஸிக் சேனலில், தான் நடிக்க வந்த கதையைப் பேட்டியாக கொடுத்துள்ளார். அது மார்ச் 4ஆம் தேதி எஸ்.எஸ். மியூசிக் யூடியூப் சேனலில் ஒளிபரப்பானது. அந்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.

பிரியதர்ஷினி என் பெயர் இல்லை. நான் பிறந்ததில் இருந்து மஞ்சிமா தான். அப்பா ஒளிப்பதிவாளர் என்பதால், அவருடைய சூட்டிங்கை பார்க்க நானும் அம்மாவும் ஊட்டி போயிருந்தேன். அப்பாவுக்கு ஒரு பதற்றம். ஏனென்றால் அவர் 510 படங்கள் பண்ணிட்டார். அவருக்குத் தெரியும். இதுஇந்த ஒரு படத்தோடு முடியாது என்று. அப்போது வேறு வழியில்லாமல் குழந்தை நட்சத்திரமாக என் முதல் படத்தில் நடிச்சேன்.

அப்போது குழந்தை நட்சத்திரமாக நிறைய பேர் நடிக்கமாட்டாங்க. அதனால், அந்த முதல்பட பிரபலத்திலேயே 8 படங்கள் குழந்தை நட்சத்திரமாக நடிச்சிட்டேன். அப்பாவுக்கு பிடிக்க...