இந்தியா, ஏப்ரல் 26 -- நான் சினிமாவில் மிக தாழ்ந்த நிலையில் இருக்கிறேன் என்றும்; தனக்கு குழந்தை இல்லை என்றும் இருந்தாலும் நம்பிக்கையுடன் அனைத்தையும் எதிர்கொள்வதாகவும் நடிகை பத்மபிரியா உருக்கமாகப் பேசிய நேர்காணல் வைரல் ஆகியது.

இதுதொடர்பாக நடிகை பத்மபிரியா ஏப்ரல் 22ஆம் தேதி ரெட் நூல் யூடியூப் பக்கத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதின் தொகுப்பினைக் காணலாம்.

மேலும் படிக்க: 'கே.பாலச்சந்தரின் உதவி இயக்குநர் முதல் நடிகர் வரை': சமுத்திரக்கனி கடந்து வந்த திரைப்பாதை!

'நடிகை பத்மபிரியா எங்கே போயிட்டாங்க. ஏன் தமிழ் சினிமாவில் நடிகை பத்மபிரியா நடிப்பதில்லை?

2014-15-ல் நான் சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்திட்டேன். நியூயார்க் யுனிவர்சிட்டியில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.அதனால் படிக்கப்போயிட்டேன். அப்பவும் நான் சினிமாவை விடவில்லை. நான் அங்கு...