திருப்பத்தூர்,ஜோலார்பேட்டை,வாணியம்பாடி, ஆகஸ்ட் 13 -- திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தபடியாக வாணியம்பாடி, பழைய பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த மக்களிடம் எழுச்சியுரையாற்றினார்.

"வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதற்குச் சாட்சியாக தொகுதி மக்கள் அனைவரும் இங்கே கூடியிருக்கிறீர்கள். ஸ்டாலின் தினமும் அறிக்கை விடுகிறார். எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராகப் போய் எம்ஜிஆர், அம்மா போன்று சவுண்ட் கொடுத்துப் பேசுகிறார் என்கிறார். ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு முழுவதும் நான் செல்லும் இடமெல்லாம் எழுச்சியைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் ஏதேதோ பேசுகிறார்.

நான் எம்ஜிஆரும் அல்ல, அம்மா போலவும் அல்ல, இங்கிருக்கிற மக்களில் ஒருவனாக இருக்கின்றேன். உங்களைப் போல த...