இந்தியா, ஜூன் 5 -- நடிகரும் இயக்குநருமான உபேந்திரா போன்ற க்ளாசிக் திரைப்படங்களை நான் இயக்கியிருந்தால், இப்போது ஓய்வு எடுத்து சந்தோஷமாக இருந்திருப்பேன் என்று புஷ்பா பட இயக்குநர் சுகுமார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க| கமல்-மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனங்கள் என்ன சொல்கிறது?

ஹைதராபாத்தில் சமீபத்தில் அர்ஜுன் சர்ஜா இயக்கியுள்ள 'சீதா பயணம்' திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகர் உபேந்திரா மற்றும் சுகுமார் இருவரும் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் உபேந்திரா பற்றி சுகுமார் நிறைய நல்ல விஷயங்களைப் பேசியுள்ளார்.

'உபேந்திரா போன்ற ஒரு வித்தியாசமான இயக்குநர் இந்தியாவில் வேறு யாருமே இல்லை. ஒரு இயக்குநர் 'A', 'UI', ஓம் மற்றும் 'உபேந்திரா' போன்ற படங்களை இயக்கியிருந்தால் அவர் ஓ...