இந்தியா, செப்டம்பர் 8 -- இபிஎஸ் ஆதரவாளர் என்பதை நிரூபித்த எம்.எல்.ஏ. பண்ணாரி கட்சியிலிருந்து பிரிந்துசென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 கெடு விதித்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

இதையடுத்து அதிமுக அமைப்புச்செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டார். செங்கோட்டையனிடம் வசம் இருந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியை ஏ.கே.செல்வராஜுக்கு வழங்கியிருந்தார் இபிஎஸ்.

இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இன்று புதிய மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஏ.கே.செல்வராஜை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

அப்போது ச...