இந்தியா, ஏப்ரல் 16 -- தமிழக சட்டமன்றத்தில் இருந்து இன்று (ஏப்ரல்16) அதிமுக வெளிநடப்பு செய்தது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: "திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்துடைய கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் முயற்சித்தோம். அந்த முயற்சியில் முதல்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இன்னும் ஓராண்டு இருக்கின்றன. எங்களது கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் வரும்.

மேலும் படிக்க | டாப் 10 தமிழ் நியூஸ்: இந்து முன்னணி நிர்வாகி கைது முதல் தமிழ்நாடு அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு வரை!

இது எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். நாங்கள் கூட்டண...