இந்தியா, பிப்ரவரி 22 -- நாங்கள் பிரிவினை கேட்கவில்லை. நீங்கள்தான் கேட்க வைக்கிறீர்கள் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தெரிவித்து உள்ளார்.

திராவிட இயக்க ஆய்வாளர் சு.திருநாவுக்கரசு எழுதிய சுயமரியாதை இயக்க வரலாறு என்ற நூல் வெளியீடு விழா நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை துவக்கிய நேரத்தில் ஒரு கருத்தை சொன்னார். கொட்டுகின்ற மலையில் வீசுகின்ற புயலில் சரலைக் கற்கள் நிரப்பிய மலை உச்சியை நோக்கி நாம் நடக்கிறோம் கையிலே ஒரு அகல் விளக்கு அந்த அகல் விளக்கு அணையாமல் இருப்பதற்கு தமிழர்களே வாருங்கள். உங்கள் கரத்தை காட்டுங்கள் என்று சொன்னார். திமுக தொடங்கப்பட்டபோது அந்த அகல்விளக்கை காப்பாற்றுவதற்கு வாருங்கள் தமிழர்களே என்று அழைத்தார். நாங்கள் அமைச்சர்களாக கட்சியிலும் ஆட்சிப் பொறுப்பிலும் வி...