இந்தியா, மார்ச் 18 -- தங்கக் கடத்தில் வழக்கில் சிக்கியுள்ள கன்னட நடிகை ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி, 'நான் எனது மனைவியை திருமணமான சிறிது காலத்திலேயே பிரிந்துவிட்டேன். கைது நடவடிக்கையில் இருந்து எனக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்று திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தார்.

ஹுக்கேரியின் வழக்கறிஞர், அவரும் ரன்யா ராவும் நவம்பரில் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக டிசம்பர் முதல் தனித்தனியாக வசித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த சூழ்நிலையின் அடிப்படையில்தான் கைது நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் கூறினார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம் அடுத்த விசாரணை வரை ஹுக்கேரிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்...