இந்தியா, மே 13 -- ஆந்திரா ஸ்டைலில் எளிமையாக செய்யக்கூடிய உணவு, தக்காளி பாத். இந்த தக்காளி பாத் என்பது ஒரு சுவைமிக்க, வாசனைமிக்க மற்றும் எளிமையானதாக செய்யக்கூடிய சாதத்தை வைத்து செய்யப்படும் உணவாகும்.

இது பெரும்பாலும் இரவில் டிஃபனுக்கு ஏற்றதாகத் தக்காளியின் புளிப்பு, மசாலாவின் காரம் மற்றும் கறிவேப்பிலையின் வாசனையுடன் சேர்ந்து சாப்பிடுவோரின் நாவிற்கு சுவையைக் கூட்டும் உணவாக இருக்கிறது. ஆந்திராவின் உணவு பாரம்பரியத்தில் தக்காளி பாத் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அத்தகைய தக்காளி பாத்தை இரண்டு பேர் சாப்பிடும் அளவு எப்படி உருவாக்கலாம் எனப் பார்க்கலாம்.

மேலும் படிக்க: 'உடல் சூட்டைத் தணிக்கும் இளநீர் நுங்கு பாயாசம் செய்வது எப்படி?': படிப்படியான வழிமுறைகள்

வெந்த சோறு - 2 கப்,

தக்காளி - 4 (நன்கு நறுக்கியது),

பெரிய வெங்காயம் - 1 (சிறிய துண...