இந்தியா, மே 14 -- நடிகை வரலட்சுமி சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம், 'தி வெர்டிக்ட்'.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் இயக்குநர் மற்றும் பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் மேடையில் ஏறி படக்குழுவினருக்கு வாழ்த்துகள் கூறினார்.

அவர் கூறிய வாழ்த்தில், ''பிரகாஷ் மோகன் தாஸுக்கு என் நன்றி. ஏனென்றால், என்னுடைய நண்பரான கோபி கிருஷ்ணனை தயாரிப்பாளர் ஆக்கியதற்கு. இந்த விழாவிற்கு வர மிக முக்கியமான காரணம், கோபி மற்றும் மோகன் தாஸ் மட்டும் தான்.

அவரிடம் இருக்கும் இரண்டு சிறப்பான பண்புகள் பற்றி சொல்லணும் என்று நினைக்கிறேன். நட்புக்கு இலக்கணம் என்றால் தாராளமாக கோபியைச் சொல்லலாம். இன்றைக்கு இப்படத்தில் பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் அவர்...