இந்தியா, மார்ச் 3 -- தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்த நடிகை அஸ்வினி நம்பியார். ருத்ரா என்னும் பெயருடனும் அழைக்கப்படுகிறார். இவர் பாரதிராஜா இயக்கிய கிழக்குச்சீமையிலே படத்தில் நடித்ததன்மூலம் தமிழ்நாட்டில் புகழ்பெற்றார். குறிப்பாக, இவர் நடித்த ஆத்தங்கரை மரமே பாடல் படுபிரபலம். இந்நிலையில் சமீபத்தில் சுழல் தி வோர்டேக்ஸ் வெப் சீரிஸில் அவர் மீண்டும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சிக்காக நடிகை அஸ்வினி நம்பியார், டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.

என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு அற்புதமான அப்பா சார். இரண்டு வருடங்கள் கழித்துதான் குழந்தை பிறந்தது. அதுக்கு முன்னால் முதல் இரண்டு மூன்று வருடங்கள் அழகான காலகட்டமாக திருமணம் முடிந்ததும் ஓடிடும் இல்லையா. ...