இந்தியா, மார்ச் 17 -- டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, பாஜக மார்ச் 17ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் பாஜக முக்கிய தலைவர்கள் உட்பட பலரும் போராட்டம் நடத்த முயன்றனர்.

ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை காரணம் காட்டி போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலை 6 மணிக்கு மேலாகியும் அவர்களை காவல்துறை விடுவிக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் காவல்துறைக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

மேலும் படிக்க | TASMAC Scam: வெடித்த போராட்டம்.. ஆவேசமாக பேசிய அண்ணாமலை.. சென்னையில் உச்சகட்ட பரபரப்பு!

இந்த நிலையில் தற்போது அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பா...