இந்தியா, ஏப்ரல் 26 -- நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியது குறித்தும் நடிகை வினோதினி டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியானது ஏப்ரல் 25ஆம் தேதியான நேற்று ரிலீஸாகி இருக்கிறது. அதன் தொகுப்பினைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க: 'கே.பாலச்சந்தரின் உதவி இயக்குநர் முதல் நடிகர் வரை': சமுத்திரக்கனி கடந்து வந்த திரைப்பாதை!

ஆமாங்க. என்னுடைய நலம் விரும்பி நடிகர் ஒருவர் கூட, நீங்க மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வந்தபின்னும் தொடர்ந்து குரல் கொடுத்திட்டே இருக்கீங்க. சினிமாக்காரன் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு இருக்கலாம் என அட்வைஸ் கொடுத்தார். அதை நான் வரவேற்கிறேன்.

ஆனால், மனிதர்களே தணிக்கைக்கு உட்படுறவங்க இருக்காங்க. உதாரணத்துக்கு அனுராக் காஷ்யப், சாவித்திரிபாய் புலே...