இந்தியா, ஜூலை 8 -- மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பயணத்தின் இரண்டாம் நாளில், கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தாஜ் விவான்டா ஓட்டலில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்துப் பேசினர். இதுதொடர்பாக மனுக்களாகவும் வழங்கினர். அத்துடன் விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் கொடுத்தவர்கள், தங்க நகை தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டு இபிஎஸ் உடன் கலந்துரையாடினர்.

தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், "தமிழகத்தில் தொடர்ச்...