இந்தியா, மே 21 -- பிரபல நடிகரான விஜய்சேதுபது ஏஸ் திரைப்படம் தொடர்பான புரோமோஷனில் தன்னுடைய படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்களின் தோற்றம் குறித்து பேசினார்.

அதில் அவர் பேசும் போது, 'எல்லோர் வீட்டிலும் அழகான பெண்களும், ஆண்களும் இருக்கிறார்கள். திரைப்படத்தைப் பொறுத்தவரையில் அந்த கதாபாத்திரத்தை மையப்படுத்திதான் கதாபாத்திரத்தின் லுக் வடிவமைக்கப்படுகிறது. மகாராஜா படத்தின் லுக் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை. ஆனால், அது ஒரு பொறுப்பான தந்தையின் கதாபாத்திரம். அதனால் அதனை அப்படி வடிவமைத்திருந்தோம்.

கடைசி விவசாயி படத்தில் இடம்பெற்ற அந்த கதாபாத்திரத்தின் லுக் எனக்கு மிகவும் பிடிக்கும்; கை நிறைய வாட்ச்களை கட்டிக்கொண்டு பட்டை அடித்துக் கொண்டு செல்லும் பொழுது, அவ்வளவு சந்தோஷமாக உணர்ந்தேன். மாஸ்ட்ர் பவானி கதாபாத்திரத்தில் நடிக்கும் பொழுது, எனக்கு ஒரு விஷ...