இந்தியா, டிசம்பர் 10 -- உங்கள் உடலின் எடையை கொஞ்சம் கூடுதலாக குறைக்கவேண்டுமா? அதற்கு ஸ்ட்ராபெரிகள் எப்படி உதவும் என்று பாருங்கள். உடல் எடையைக் குறைக்க உதவுவது ஸ்ட்ராபெரிகள், இதில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் நீங்கள் அதிக உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது எப்படி என்று பாருங்கள். இது சுவையாகவும் இருக்கும். அதே நேரத்தில் ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தரும் என்பதால், இது உங்கள் ஒட்டுமொத்த கலோரிகள் உட்கொள்ளும் அளவைக் குறைக்கும். இதன் இனிப்புச் சுவை உங்களுக்கு சர்க்கரை சாப்பிடவேண்டும் என்ற உணர்வைக் கட்டுப்படுத்தும். இது எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கிறது. வீக்கம்தான் உடல் எடையை அதிகரி...