இந்தியா, மார்ச் 20 -- தைரியம் இருந்தால் நான் பேசும் பதிலை கேட்டுவிட்டு போகவேண்டும். ஓடுகிறீர்களே! என அதிமுகவினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. இந்த விவாதத்தின் முடிவில் அதிமுக எம்.எல்.ஏக்கள் முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் நடந்த சம்பவம், சாத்தான் குளத்தில் நடந்த சம்பவங்களை மறந்துவிடக் கூடாது. உங்களை பொறுத்தவரை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொல்ல நான் தயாராக இல்லை, தைரியம் இருந்தால் நான் பேசும் பதிலை கேட்டுவிட்டு போகவேண்டும். ஓடுகிறீர்களே! என பேசினார்.

தொடர்ந்து ப...