இந்தியா, ஜூலை 2 -- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்பவர் மீது கோயிலுக்கு வந்த நிக்கி என்பவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து திருப்புவனம் போலீசார் அடித்துக் கொன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அஜித் குமாரின் தாயிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர் கூறிதாவது, "துரதிஷ்டவசமாக சில ...