ஆத்தூர்,திண்டுக்கல், செப்டம்பர் 7 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. இன்று ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். முதலில் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் எடப்பாடியாருக்காக காத்திருந்த பொதுமக்கள் மத்தியில் எழுச்சியுரையாற்றினார்.

"திமுக ஆட்சி அமைந்து 52 மாதம் நிறைவடைந்துவிட்டது என்றாலும், இந்த ஆட்சியில் இந்த தொகுதிக்கு எந்த பெரிய திட்டமும் கொடுக்கவில்லை. இங்கு அமைச்சரும் இருக்கிறார் என்றாலும் திண்டுக்கல் மாவட்டத்துக்கே எந்த திட்டமும் கொடுக்கவில்லை,

இதுவே அதிமுக ஆட்சியில் நீண்டநாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 350 கோடி ரூபாயில் அமைத்துக்கொடுத்தோம்....