இந்தியா, மார்ச் 29 -- தேனியோட கல்ச்சரில் ஒரு சவுண்ட் இருக்கும் என்றும், தேனி மாவட்டத்தில் இன்னமும் 100 படங்கள் எடுக்கலாம் என்றும்; தன்னுடைய சினிமாவெல்லாம் வாழும் சினிமா என்றும் இயக்குநர் சீனு ராமசாமி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இயக்குநர் சீனு ராமசாமி குமுதம் யூடியூப் சேனலுக்கு, அளித்த நேர்காணல் 2024 செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. அதன் தொகுப்பினைக் காணலாம்.

ஒரு உண்மையைச் சொல்லணும். ஒரு ஒற்றையடிப் பாதையை உருவாக்குவது தான் கஷ்டம். செட்டில் இருந்த சினிமாவை முதன்முதலில் ஒருத்தர் கிராமங்களுக்குக் கூட்டிட்டுப் போயிருக்கார். நகரங்களில் இருந்த நட்சத்திர நடிகர்களை கிராமங்களில் கொண்டுபோய் நடிக்க வைச்சிருக்கார். இந்த கிராமிய சினிமாக்களுக்கு தந்தையாக பாரதிராஜா சார் இருந்திருக்கிறார். முதன்முதலில் பாதைபோடுவது ரொம்ப கஷ்டம். அவர் போட்ட பாதையில் செ...