இந்தியா, பிப்ரவரி 21 -- 'தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால், வரலாறு மாற்றப்படும். கெட்டவர்கள் நல்லவர்களாகவும், நல்லவர்கள் கெட்டவர்களாகவும் காட்டப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

பி.எம்.ஸ்ரீ பள்ளி என்ற திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறது. தரமான கல்வியை வழங்குவதுதான் இதன் நோக்கம் என்கிறார்கள். அப்படியென்றால் தமிழ்நாடு ஏற்கெனவே தரமான கல்வியை தான் வழங்குகிறது. கூடுதலாக என்ன தரம் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் உள்ளது. புதிய கல்விக் கொள்கையை பி.எம்.ஸ்ரீ திட்டம் மூலம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறது. 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறையை கொண்டு வருவது உள்ளிட்ட திட்டங்கள் இதில் உள்ளது.

இந்தியாவிலேயே இடைநின்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டப...