ராமநாதபுரம்,சிவகங்கை,தூத்துக்குடி, ஆகஸ்ட் 3 -- 'மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்' என்கிற தலைப்பில், தன்னுடைய எழுச்சி பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு, தேர்தலுக்கு முன்பே, இந்த பயணம் பலப்பரிட்சையாக இருக்கும் என்று தான் பேசப்பட்டது. அதற்கு ஏற்றார் போல, முதல் நாள் மேட்டுப்பாளையத்தில் சுமாரான அளவு தான் கூட்டம் வந்தது. அது குறைவு என்றுகூற முடியாது, ஆனால், அந்த பகுதி அதிமுகவும், பாஜகவும் பலம் நிறைந்த பகுதி. அப்படி பார்க்கும் போது, அங்கு கூடிய கூட்டம், இன்னும் எதிர்பார்ப்புக்கு உட்பட்டது.

முதல் நாள் முதல் கியரில் சென்ற எடப்பாடி பழனிசாமியின் 'எழுச்சிப் பயணம்' அதன் பின், வடமாவட்டங்களுக்கு மாறிய பின், டாப் கியரில் பறக்கத் தொடங்கியது. வழக்கம் போல, தன்னுடைய இயல்பான பேச்சால், கட்சியினரையும், பொதுமக்களையும் கட்டிப் போட ஆரம்பித்தார்,...