சென்னை,கச்சத்தீவு,ராமேஸ்வரம், ஏப்ரல் 2 -- கச்சத்தீவை மீட்பது தொடர்பாக திமுக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஆதரித்த, தமிழக காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் செல்வப்பெருந்தகையும், வெளியே வந்து, 'கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தவறல்ல' என்று தங்கள் நிலைப்பாட்டை மாற்றினர். அப்போது செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை பேசியது இதோ:

''இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜெய்சங்கர், அன்று வெளியுறவுத்துறை செயலராக இருந்தவர். அவர் இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது சரி என்று பேசியிருக்கிறார். யுத்தம் நடத்தியா அந்த இடத்தை பெற முடியும் என்று ஏஜி முகுல் ரோஹித் தெரிவிக்கிறார். அது கொடுத்தது கொடுத்தது தான், அதற்கு பதில் நாம் ஏராளமான இடங்களை பெற்றிருக்கிறோம் என்று சில இடங்களில் தெரிந்தோ, தெரியாமலோ, அன்னை இந்திராகாந்தியின் பெருமை...