இந்தியா, பிப்ரவரி 24 -- நடிகர் ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகர்களான ஆர்யா, கவுதம் கார்த்திக், மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, ரைசா வில்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னையில் மிஸ்டர் எக்ஸ் டீசர் வெளியீட்டு விழா மேடையில் நடிகர் ஆர்யா பேசுகையில், ''எனக்கு இயக்குநர் மனு ஆனந்த்தை அனுப்பிவைச்சது புரொடியூசர் லட்சுமண் சார் தான். கதையைக் கேட்டதும், ஸ்கிரிப்ட் பெரிதாக இருக்கே, பட்ஜெட் தாங்குமான்னு தான் பக்கத்தில் இருந்த இன்னொரு புரொடியூசர் ஏ.வெங்கடேஷ் சார்கிட்ட கேட்டேன். அவர் சொன்னது தியேட்டரிக்கலாக நாம் ஒரு படம் பண்ணனும். அதற்கு கண்டிப்பாக செலவு செய்து ஆகணும்னு நம்பிக்கையாக சொன்னார். இப்போது இருக்கிற காலத்தில் தியேட்டரை நம்பியே நாம் படம் எடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம். அவ...