இந்தியா, மார்ச் 5 -- சென்னை தியாகராய நகரில் உள்ள சிவாஜி வீட்டில் பேரன் துஷ்யந்திற்கு எந்த உரிமையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

துஷ்யந்தின் அப்பாவான ராம்குமார் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம், பிரபுவுக்கு சொந்தமானது. ஆகையால் துஷ்யந்துக்கு இந்த வீட்டில் உரிமை இல்லாதபோது சிவாஜியின் வீட்டை நீங்கள் ஜப்தி செய்யக்கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | G.V. Prakash Kumar: இதுவரை இல்லாத ஒரு படம்! 4 பார்ட்டுக்கும் கதை ரெடி! குஷியில் ஜிவி பிரகாஷ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் ஈசன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் படமொன்றை தயாரிக்க முடிவு செய்யப்பட்...