இந்தியா, ஏப்ரல் 19 -- மதிமுக கட்சி பதவியை துரை வைகோ ராஜினாமா செய்து உள்ளது அரசியல் நாடகம் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்து உள்ளார்.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் பதவி விலகல் அறிவிப்பு குறித்து பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், இது ஒரு அரசியல் நாடகமாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்துக்கு முந்தைய நாளில் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தராசு ஷ்யாம் தனது பேட்டியில், "துரை வைகோ முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். ஆனால், கட்சியின் இணையதள பிரிவு இன்னும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. இணையப் பிரிவைக் கட்டுப்படுத்துபவர்களிடமே உண்மையான அதிகாரம் இருக்கிறது. ஆனால், இந்த பதவி விலகல் ஒரு நாடகமாக இருக்கலாம். நாளைய நிர்வாகக் குழுக் கூட்டத்தில், அ...