ஊட்டி,நீலகிரி,உதகை, ஏப்ரல் 25 -- நீலகிரி மாவட்டம் உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டு துவக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் இன்று நடந்து வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில்,

மேலும் படிக்க | சர்ச்சைகளுக்கு இடையே ஆளுநர் நடத்த இருந்த துணை வேந்தர்கள் மாநாடு! புறக்கணித்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள்!

''துணை குடியரசு தலைவர் கலந்து கொண்டு இருப்பது மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் சிறப்பாக உள்ளது. அரசு பள்ளிகள் நிலை மோசமாக உள்ளது. இந்த இரண்டு நாள் மாநாடு மிக முக்கியமானது. இந்த மாநாடு கல்வியை அடுத்த கட்டம் கொண்டு செல்ல மிக உதவியாக இருக்கும், அதற்காக விவாதிக்க இருக்கிற...