திருப்பூர், ஆகஸ்ட் 30 -- திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதித் தொழிலுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்கான கோரிக்கை வைத்து, எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்ததில் கூறியிருப்பதாவது:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாட்டின் மிக முக்கியமான பொருளாதார உயிர்நாடிகளில் ஒன்று திருப்பூர் பின்னலாடை மையம் என்பது உங்களுக்குத் தெரியும், இது தமிழ்நாட்டின் மக்கள் மட்டுமல்ல, பீகார், உத்தரபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற பிற மாநிலங்களிலிருந்து வரும் குறிப்பிடத்தக்க தொழிலாளர்களையும் உள்ளடக்கிய ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் கிட்டத்தட்ட 60% பங்களிக்கிறது, இதன் மூலம் நாட்டிற்கு கணிசமான அந்நிய...