இந்தியா, மே 14 -- திருநங்கைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, வாழும் காலத்தில் கவுரவமாக வாழக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தரணும் என இயக்குநர் சீனு ராமசாமி அளித்த பேட்டி வைரல் ஆகியிருக்கிறது.

2016ஆம் ஆண்டு ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு, இயக்குநர் சீனுராமசாமி அளித்த காணொலி பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பழைய மாதிரி காமெடியாக நடிக்க முடியாது! உதயநிதிக்காக குறிப்பிட்ட விஷயங்களை செய்ய முடியும்.. உடைத்து பேசிய சந்தானம்

''உங்கள் படங்களில் நடிகர்களைவிட, கதாபாத்திரங்கள் அதிகமாகப் பேசுதே?

டோல்கேட்டில் போய் பாருங்க, வெள்ளரிப்பிஞ்சு வித்திட்டிருக்கா ஒருத்தி. பக்கத்தில் ஒரு அக்கா, நம் தலையில் கை வைச்சு, ஜெபிக்குது. மனசு உடைஞ்சு சமயத்தில், நம்பிக்கையற்ற நேரத்தில் 'நீ நல்லாயிருப்பான்னு சொல்வாங்க', நாம் ஒரு பத்து ரூபாய் தருவோ...