இந்தியா, மார்ச் 10 -- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு "பெருந்தலைவர் காமராசர் நானங்காடி" என் பெயரிடப்படும் தமிழ்நாடு அரசு முடிவு நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவித்து உள்ளார்.

முன்னதாக திருத்தணியில் உள்ள காமராஜர் பெயரில் உள்ள காய்கறி சந்தைக்கு பதிலாக கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு காய்கறி சந்தை என்ற பெயரை மாற்ற உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அண்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு இருந்தனர்.

சீமான் வெளியிட்ட அறிக்கையில், திருத்தணி நகரில், பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை சீரமைப்புச் செய்து மீண்டும் திறக்கவிருக்கும் நிலையில், அதனை கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்ற...