சென்னை, ஏப்ரல் 30 -- திமுக தொண்டர்களுக்கு 'உங்களில் ஒருவன் எழுதும் மடல்' என்கிற பெயரில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் மடலில் குறிப்பிடப்பட்டிருப்பதாவத:

''தடைக்கற்கள் உண்டென்றாலும் தடந்தோளுண்டு என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வரிகளை நெஞ்சில் ஏந்தி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு நம் பாதையில் தடைக்கற்களை அள்ளி அள்ளிப் போட்டாலும், அதனை எதிர்கொள்ளும் தடந்தோள்களுடனும் வலிமை மிக்க கால்களுடனும் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம் மக்கள் நலன் காக்கும் சாதனைத் திட்டங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கவிதை வரிகளால் நமக்கு உணர்வூட்டிய திராவிடக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று சட்டமன்றக் கூட்டத...