இந்தியா, மே 11 -- திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால் விசிக தொடருமா? என்ற கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்து உள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்காக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது குறித்த கேள்விக்கு, "டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்; தற்காலிகமாக அல்ல" என தெரிவித்தார்.

மேலும் படிக்க:- 'நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விவசாயி சின்னம் ஒதுக்கீடு!'

இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "தற்போது நாம் எந்த கருத்து சொன்னாலும், அதை சில இந்துத்துவ செயல்திட்டத்தை நடைமுறைபடுத்தும் நபர்கள் எதிராக பார்க்கிறார்கள்" என்றார் இங்கு இந்துத்துவ அரசியல் செயல்திட்டம் என்பது ...