சென்னை,திருநெல்வேலி, ஏப்ரல் 13 -- தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன், தன்னுடை எக்ஸ் பக்கத்தில் பதிலடி ஒன்றை பதிவு செய்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலடியாக இந்த அறிக்கையை நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ:

மேலும் படிக்க | Savukku Shankar: 'கொளத்தூர் தன்ராஜ் எங்கே? ' சேகர்பாபு பேசியதாக ஆடியோவை வெளியிட்ட சவுக்கு சங்கர்!

''நம்மைப் பார்த்து "பொருந்தாக் கூட்டணி" என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள்! ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்! ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஸ்டாலின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது!

இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின...