இந்தியா, மார்ச் 16 -- தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக நாடாளுமன்ற தெகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் தமிழக அரசுடன் தேமுதிக கைகோர்த்து தமிழக மக்களுக்காக போராடும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேமுதிக நிர்வாகி இல்ல காதணி விழாவில் பங்கேற்பதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பழனிக்கு வருகை தந்தார். அவருக்கு தேமுதிகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரேமலதா நிர்வாகிகளின் குழந்தைகளை வாழ்த்தினார். தொடர்ந்து தனியார் தங்கும் விடுதிக்குச் சென்ற பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். போது அவர் தெரிவித்ததாவது:-

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தேமுதிக வரவேற்கிறது என்றும், அந்த 2006 ஆம் ஆண்டு தேமுதிக நிறுவன ...