இந்தியா, ஜூன் 30 -- 'திமுக ஆட்சியில் தொழில்துறை கட்டமைக்கப்பட்ட பிம்பமாக மட்டுமே இருக்கிறது'' என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் இன்று எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது.

"தமிழகம் கடந்த பல ஆண்டுகளாக தென்னிந்தியாவின் தொழில்துறை இதயமாக போற்றப்பட்டு வந்துள்ளது. ஆட்டோமொபைல், மின்னணு பொருட்களின் உற்பத்தி முதல், தொழில்துறை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி வரை புதுமை, பொருளாதார உற்பத்தி திறன் ஆகியவற்றின் அடையாளமாக தமிழகம் இருந்து வருகிறது. இந்த புகழையும், பெயரையும் நிலைநிறுத்துவதற்கு தொலைநோக்குப் பார்வை, சிறந்த நிர்வாகம், எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதார மீள்தன்மை தேவைப்படுகிறது. தமிழகத்தின்...