இந்தியா, மார்ச் 7 -- சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை 2ஆவது நாளாக நடந்து வரும் நிலையில் மது கொள்முதல் மற்றும் விற்பனையில் வரி ஏய்ப்பு நடந்தாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் 4 மற்றும் 5வது தளங்களில் செயல்படும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுவகைகளை விநியோகம் செய்யும், திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் குடும்பத்திற்கு தொடர்புடைய அக்கார்ட் டிஸ்லரிஸ் அண்ட் பிவெரெஜஸ் பிரைவெட் லிமிடெட், எஸ்.என்.ஜே குழுமம், கால்ஸ் குழுமம், எம்.ஜி.எம் குழுமம் ஆகிய மதுபான ஆலைகளின் தலைமை அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது.

மேலும் மின்சாரம், மதுவிலக்கு ...