இந்தியா, மார்ச் 8 -- நம்மை ஏமாற்றிய திமுக அரசை வீழ்த்த மகளிர் தினமான இன்று உறுதி ஏற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில், இன்றைக்கு மகளிர் தினம், தமிழ்நாடு முழுக்க உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கச்சி, தோழி உள்ளிட்ட அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். பாதுகாப்பாக இருந்தால்தானே சந்தோஷத்தை உணர முடியும். எந்த பாதுகாப்பும் இல்லாதபோது, பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது எந்த சந்தோஷமும் இருக்காதுதானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.

என்ன செய்ய முடியும். நீங்க, நாம எல்லோரும் சேர்ந்துதான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவங்க இப்படி ஏமாத்துவாங்கனு இப்போதான் தெரியுது. எல்லாமே மாறக்கூடியதுதானே. மாற்றத்திற்குரியதுதானே. கவலைப்படாதீங்க.

2026இல் ந...