இந்தியா, ஜூன் 23 -- 'திமுக அரசின் விளம்பர ஸ்டண்ட்களால் பயணிகளுக்கு பாதிப்பு கூடாது' என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் சோர்வடைந்த நிலையில் சிக்கித் தவித்த அவலத்தை நாம் பார்த்தோம். பேருந்துகள் வராத நிலையில், அதுபற்றிய முறையான அறிவிப்புகளும் இல்லாமல் பயணிகளிடையே குழப்பமும் தவிப்பும் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இதுதொடர்பாக அவர் டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையில் எதிர்க்கட்சித் தலைவர் எழுதியிருக்கும் கட்டுரையின் தமிழாக்கம்:

சொந்த ஊருக்குச் செல்லும் கனவுகளுடன் குழந்தைகள் மற்றும் சுமைகளுடன் பேருந்து நிலையத்தில் காத்துக் கிடந்தனர். அரைகுறை வசதிகள், மோசமான நிர்வாகம், நிறுத்தப்படாமல் சென்ற பேர...