மதுரை,சென்னை,madurai, மார்ச் 10 -- 'மதநல்லிணக்கம் தொடர்பாக தி.மு.க. அரசின் சாயம் வெளுக்கிறது' என்று தவெக சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாகவது:

''அறவழிப் போராட்டம் என்பது அரசியல் அடையாளங்களில் ஒன்று. அதுவும் மதநல்லிணக்கம் பேண வலியுறுத்தும் பேரணியை எந்தக் கட்சி அல்லது அமைப்பு நடத்தினாலும், அது கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்று.

மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பில் மத நல்லிணக்கப் பேரணியை மதுரையில் நடத்த அக்கூட்டமைப்பினர் அனுமதி கேட்டும், ஆளும் தி.மு.க அரசு அனுமதி மறுத்திருக்கிறது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களே நேற்று மதுரையில் நடைபெற்ற அக்கூட்டமைப்பின் நிகழ்ச்சிய...