இந்தியா, ஏப்ரல் 20 -- திமுகவை மட்டுமே நம்பி இருப்பதை போல் தோற்றம் ஏற்படுத்துகிறார்கள், தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் தொண்டர்களிடம் உரையாற்றினார். அதில், திமுகவை நம்பி மட்டுமே விசிக உள்ளது போல் சில அற்பர்கள் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட, இயக்கத் தோழர்கள் அதில் தெளிவை பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை.

எல்லா கதவுகளையும் திறந்து வைத்து இருப்பது. ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது. கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் கூட்டணி உறவை வைத்துக் கொள்வது என்பன உள்ளிட்டவை பெரிய ராஜதந்திரம் இல்...