நன்னிலம்,திருவாரூர்,கீழ்வேளூர், ஜூலை 18 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமின இன்று திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்து வருகிறார். மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் கொல்லுமாங்குடி என்ற இடத்தில் ரோடு ஷோ நடத்திய இபிஎஸ், நன்னிலம் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு முன்னாள் அமைச்சர் காமராஜுடன் மாட்டு வண்டி ஓட்டிச்சென்ற இபிஎஸ் அதன் பிறகு மக்களிடம் உரை நிகழ்த்தினார்.

"இந்த எழுச்சி பயணத்தில் எழுச்சியுடன் திகழும் மக்களைப் பார்க்கையில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதியாகத் தெரிகிறது. தேர்தல் வெற்றி விழாவை போன்று கூட்டம் உள்ளது.

இந்த மாவட்ட...