சென்னை,கோவை. சேலம், ஏப்ரல் 19 -- சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கிறது அதிமுக. அதன் பல்வேறு அணிகள் சார்பில், திமுகவின் செயல்பாடுகளை கண்டித்து போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக சார்பில் இன்று கவனம் ஈர்க்கும் முக்கிய போாரட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மதிமுக கட்சி பதவியில் இருந்து துரை வைகோ விலகல்! மல்லை சத்யா உடன் பனிப்போர் காரணமா? உச்சகட்ட பரபரப்பு

நீட் நுழைவுத் தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்று பொய் வாக்குறுதிக் கூறி ஆட்சிக்கு வந்த திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசால் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியும், மு.க.ஸ்டாலின் அரசை கண்டித்தும் அ.இ.அதிமுக மாணவரணி ...