இந்தியா, மார்ச் 9 -- இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினம், காரைக்கால், இராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேந்த மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கைக் கடற்படையினரால் 3656 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும். மொத்தம் 611 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.

மீனவர் பிரச்னை விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரம...