இந்தியா, மார்ச் 20 -- சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அதிக பிரசங்கி தனமாக நடந்து கொள்வதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த மார்ச் 17ஆம் தேதி தொடங்கிய 2025 - 26ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை மீதான 3 நாள் விவாதம் (மார்ச் 19) நேற்றுடன் நிறைவடைந்து. இன்றைய தினம் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. நாளை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை உள்ளது. வரும் மார்ச் 24ஆம் தேதி முதல் ...