இந்தியா, மார்ச் 28 -- தவெக பொதுக்குழு கூட்டத்தில் தளபதி பட்டத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் துறந்து உள்ளார். இனி வெற்றித் தலைவர் என்று அழைக்கப்படுவார் என அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்து உள்ளார்.

தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில் "இன்று வரையும் மக்களால், கட்சியால் பாசமுடன் தளபதி என்று அழைத்த நிலையில், இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரல் உடன் அழைப்போம். தளபதி பட்டத்தை இந்த பொதுக்குழுவில் இழந்து வெற்றித் தலைவராக்க தீர்மானமாக சமர்பிக்கிறேன் ஏற்போர் ஆம் என்க" என தெரிவித்தார். இத்தீர்மானம் தொண்டர்கள் ஆதரவுடன் நிறைவேறியது.

இந்த அவையின் பெயர் ராமச்சந்திரா, 1972ஆம் ஆண்டில் எந்த தீய சக்தியை எதிர்த்து, எந்த ஊழலை எதிர்த்து, எந்த குடும்ப ஆட்சியை எதிர்த்து கட்சி ஆரம...