இந்தியா, மே 18 -- பிரபல நடிகரான விஷால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசும் போது, ' செங்கல்பட்டு மாவட்ட செயலாளரின் சதீஷின் கல்யாணம். அவனுக்கு நான்தான் தாலி எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறினான். அதனால்தான் வந்தேன். மதுரை வந்து மீனாட்சி அம்மனை பார்க்காமல் சென்றால், என் அம்மா பயங்கரமாக திட்டி விடுவார். மீனாட்சி அம்மனை பார்த்தேன்.

சிவபெருமானை பார்த்தேன். இதே தெருவில் தான் திமிரு படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம்; இந்த கோயில் மிக மிக சக்தி வாய்ந்த கோயில்; மனதார வேண்டிக் கொண்டேன்.

மேலும் படிக்க | 'என் வாந்திய கைல ஏந்துனார்.. ராத்திரியில அப்படி படுத்துவேன்.. ஆனா கொஞ்சம் கூட' - ஆர்த்தி ரவி எமோஷனல் த்ரோபேக் பேட்டி!

தரிசனம் மிக நன்றாக இருந்தது. பாமர மக்கள் பலரும் என...