இந்தியா, பிப்ரவரி 28 -- நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பியை மாற்ற முடியும் என தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தர்மசெல்வன் பேசிய ஆடியோவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வருகின்றன. தர்மபுரியில் மட்டுமல்ல இதுபோன்ற மிரட்டல்கள் திமுகவினரால் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருவதன் எடுத்துக்காட்டு தான் இது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியில் திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதும், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

திமுகவினரின் மிரட்டலால் அரசு அத...