இந்தியா, ஏப்ரல் 30 -- சாலையில் செல்லும்போது தலைக்கவசமின்றி இருசக்கர வாகனத்தில் என்னை பின் தொடர்வது, வாகனத்தின் மீது ஏறுவது உள்ளிட்ட செயல்கள் கவலையை தருவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க:- அட்சய திருதியை 2025: 'இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!'

என் நெஞ்சில் குடியிருக்கும், என் உயிரினும் மேலான தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் வணக்கம். மூன்று நாட்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை, உங்கள் அளவுகடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! கோவை மற்றும் கொங்கு தங்கங்களே, உங்களை நான் நேசிக்கிறேன்.

நம்மீது இத்துணை அன்பு காட்டும் உங்களுக்கும், மக்களுக்கும் உண்மையான மக்களாட்சியையும், உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத்தருவதே நாம்...