இந்தியா, மார்ச் 3 -- தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாக ஒன்றிய அரசு பார்க்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நீர் வளமும், நில வளமும், கடல் வளமும் சூழ்ந்திருக்கக்கூடிய தமிழர்களுக்கு நாகர்கள் என்ற பெயர் வரக் காரணமானது, இந்த நாகை மாவட்டம்! தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகள் பிறந்தது, இந்த நாகை மாவட்டம்! ஒரு பக்கம் சிக்கல் சிங்காரவேலர் கோயில் - மற்றொரு பக்கம் வேளாங்கண்ணி - மற்றொரு பக்கம் நாகூர் தர்கா என்று நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக சமத்துவம் உலவும் மாவட்டம்தான், இந்த நாகை மாவட்டம்! இத்தகைய பெருமைக்குரிய இந்த நாகை மாவட்டத்தில...